Saturday, November 13, 2010

கணற்பொறி வாழ்க்கை


சலசலக்கும் சிற்றோடையின் ஓசை ...,
மரங்களடர்ந்த சூழல்..,
பெயர் தெரியாப் பூக்களின் வாசம்..,
காட்டுப்பூச்சிகளின் ரீங்காரம்...,

இதமான தென்றல்...,
நட்சத்திரங்கள் கண்சிமிட்ட...,
பௌர்ணமி ஒளியில்...,
கயிற்றுக் கட்டிலில்...,
கதையளந்தபடி இரவு உணவு...

விவசாயம் செய்துக்கொண்டு நீயும்...
பானை முடிந்துக் கொண்டோ, பாய் பின்னிக்கொண்டோ...,
உனக்குதவியாக நானும் இருந்திருப்போம்...,
மகிழ்ச்சியாகவே போய் இருக்கும் வாழ்க்கை..??!!!

நரகத்து நகர வாழ்க்கையில்...,
கணிப்பொறியாளனாய் நீ இருக்க...,
கணர்பொறியை கக்கிக்கொண்டு
நகர்கிறது வாழ்க்கை.....,








7 comments:

  1. //கணர்பொறி ///

    கவிதை கரு நல்லா இருக்கு ஆனா கணர்பொறி அப்படினா என்ன அர்த்தம்க?

    ReplyDelete
  2. பிளாகர் TERROR-PANDIYAN(VAS) கூறியது...

    //கணர்பொறி ///

    கவிதை கரு நல்லா இருக்கு ஆனா கணர்பொறி அப்படினா என்ன அர்த்தம்க?////

    கணல் னா நெருப்பு.., கணர்பொறி னா நெருப்பு பொறி னு அர்த்தம்

    ReplyDelete
  3. //கணல் னா நெருப்பு.., கணர்பொறி னா நெருப்பு பொறி னு அர்த்தம்//

    விளக்கத்திற்க்கு நன்றி!!

    ReplyDelete
  4. வெறும்பய கூறியது..
    உண்மைதான் நண்பரே.//
    தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  5. THOPPITHOPPI கூறியது NICE///
    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete