செவ்வாய், டிசம்பர் 06, 2011

அன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,

திருமலையில் வாழும் ஏழுமலையானின் அருளால் பிறந்தவன் நீ!
சகோதரிகளுக்கு சிறந்த  காவலன் நீ!
வீட்டில் போடும் செல்ல சண்டையின் வேட்டைக்காரன்நீ!
உடன் பழகும் பிள்ளைகளுக்கு உற்ற நண்பன் நீ!
நீ பயிலும் பள்ளியில் மாண்புமிகு மாணவன் நீ!
விளையாட்டில் கில்லிநீ!
சச்சினின்தீவிர ரசிகன் நீ!
சில சமயங்களில் மொக்கை போடுவதில் “திருப்பாச்சி அருவாள் நீ!
சைக்கிள் ஓட்டும் வேகத்தில் “சுறா நீ
வீட்டில் அனைவருக்கும் அழகிய தமிழ் மகன்  நீ!
எதையும் “நேருக்கு நேர் எதிர் கொள்வதில் வேலாயுதம் நீ
எங்களுடன் ஒன்ஸ்மோர் அடுத்த ஜென்மத்திலும் பிறக்க வேண்டும்.
 
 சகோதரன் என்பவன் குழந்தை பருவத்தின் ஒரு பகுதி.  
அவ்வரம் அமைய பெற்றவர்கள்
யாரும் அதை இழக்ககூடாது. 
சகோதரிகள் எங்களுக்காக  நீ 
பிறந்ததற்கு எங்கள்  நன்றி! 
 
சகோதரன் என்பவன் மிகப்பெரிய பரிசு. 
உன்னை எங்களுக்கு சகோதரனாய் தந்ததற்கு
கடவுளுக்கு எங்கள் நன்றி.
உன்னைப் போன்ற சகோதரன் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

சகோதரன் என்பவன் ஒரு 
உற்றத் தோழன் வாழ்க்கையில்,
உன்னை எங்கள் சகோதரனாய் 
அடைந்ததற்கு பெருமைக் கொள்கிறோம்.
 
டிஸ்கி: அம்மா கொஞ்சம் பிஸி என்பதால் எங்கள் அன்பு சகோதரன் பிறந்த நாள் பதிவை நாங்கள் போடுகிறோம். அனைவரும் அவனை வாழ்த்த வேண்டுகிறோம். அவனுக்கு இது 12வது பிறந்த நாள். அவன் விஜயின் ரசிகன். அதனால் 12 வரிகளில், விஜய் படம் வருமாறு கவிதை எழுத முயற்சி செய்தோம்.
இப்படிக்கு 
தூயா, 
இனியா.


18 கருத்துகள்:

 1. அடடா... குட்டீஸ்ங்க பதிவா இது :-)

  பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அட குட்டீஸ் பதிவு... :)

  பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 4. என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. நீங்க டிஸ்கியே போட தேவையில்லை...

  உங்க தம்பி விஜய் ரசிகர்ன்னு பதிவை படிக்க ஆரம்பிக்கும்போதே தெரிந்து விட்டது...

  பதிலளிநீக்கு
 6. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள், ஹா ஹா ஹா ஹா குட்டிங்க பதிவா வாங்க வாங்க உங்களையும் வாழ்த்துகிறேன்...!!!

  பதிலளிநீக்கு
 7. குழந்தை சகோதரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  பதிவு சிறப்பாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 8. எல்லா விஜய் ஹிட் படங்களூம் வந்துடுச்சு போல குட்

  பதிலளிநீக்கு
 9. என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்...

  www.rishvan.com

  பதிலளிநீக்கு
 10. எங்களது மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. அன்புத் தம்பிக்கு இனிய
  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  வாழ்வில் எல்லா நலன்களும் பூரணமாய்
  கிடைத்திட இறைவனை இறைஞ்சுகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு