வியாழன், மார்ச் 08, 2012

பெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்

                                    
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!
                                     

ஒரு துளி
உதிரத்தை கூட
உருவம் செய்து
குழந்தையாய் தருபவள்
பெண்!!!

செலவு செய்தாலும்
எதோ ஒரு வகையில்
சேர்த்து வைப்பவள்
பெண் ...!

தங்கமாய் வாங்கினாலும்
தன் மகள்
தாலிபாக்கியம் பெற
தந்து விடுகிறாள்
பெண்!!!

புடவை வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்க்கிறாள்
பெண்...!!!

தன் வயிறு காய்ந்தாலும்
மார்பிலே பால்கொடுத்து
மகனை வளர்க்கிறாள்
பெண்...!!!

கணவன் கயவன்
என்றாலும்
காரணம் இவள் என்று
கெட்ட பெயர்
வாங்கிக்கொள்கிறாள்
பெண் ...!!!

கொண்டவன்
குடிகாரன் ஆனாலும்
குடித்துவிட்டு அடித்தாலும்
குடும்பத்தை காக்கிறாள்
பெண்...!!!

பசி என்று
வரும் பிள்ளைக்கு
பச்சை தண்ணீராவது
தந்து விடுவாள்
பெண்...!!!

எப்போதும்...
பெருமையை
பிறருக்கு கொடுத்து
தான் மட்டும்
சிறுமை பெறுகிறாள்
பெண்...!!!
சுட்ட டிஸ்கி: 
                       
 இன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மைமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தாராம், யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்களாம். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா? ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா? அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா? தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்... டிஸ்கி ஒரு வலைப்பூல சுட்டது. வலைப்பூவின் பெயர் நினைவில்லை. அவருக்கு என் நன்றி

தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!


28 கருத்துகள்:

 1. அ>>>>>தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!


  இந்த நன்னாளீல் ஆண்களுக்கு சம உரிமை கொடுத்து, கொஞ்சமாவது அவர்கள் பேச்சை கேட்டு மதிக்க முயற்சியாவது செய்யவும் ஹி ஹி

  பதிலளிநீக்கு
 2. முதலில் மகளிர் தின வாழ்த்துக்கள்.. சிறப்பான் பதிவு யாவரும் வாசிக்க வேண்டிய பதிவு...

  பதிலளிநீக்கு
 3. பெண்களால் பிறந்தோம்..பெண்களைப் போற்றுவோம்..பெண்ணைத் தாங்கி வந்த வரிகள் அருமை.பிடித்தது.மகளிர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. தலைமுறை உயர
  பெண்ணின் புகழ் உயர
  மகளிர் தின நல வாழ்த்துக்கள் சகோதரி…

  பதிலளிநீக்கு
 5. அருமைப்பதிவு மகளிரிதின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. ‘கள்’ ஆனாலும் கணவன் 'Full' ஆனாலும புருஷன் என்றிருந்ததெல்லாம் அந்தக் காலம். ஆனாலும் இன்றும் பெண்கள் நிலை மாற வேண்டியதாகத் தான் இருக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்காக நானும் குரலுயர்த்திச் சொல்கிறேன் என் மகளிர்தின வாழ்த்துக்களை.

  பதிலளிநீக்கு
 7. தோழி.. மகளீர் தின வாழ்த்துக்கள்!
  மேமோசே என்ற இந்த வகை மலரை பிரான்சில் கொடுப்பது கிடையாது.
  இந்த மலருக்கு அழகு மட்டும் தான் உள்ளது. வாசமோ காயோ பழமோ கொடுப்பதில்லை.
  ஒரு சமயம் அழகாய் இருந்தால் மட்டும் போதும் அவர்களுக்கு அறிவு எதற்கு என்று சிம்பாலிக்காகச் சொல்கிறார்களோ என்னவோ...

  பதிலளிநீக்கு
 8. ////ஒரு துளி
  உதிரத்தை கூட
  உருவம் செய்து
  குழந்தையாய் தருபவள்
  பெண்!!!////

  அழகான வரிகள்

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு அக்கா
  மகளிர் தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. //எப்போதும்...
  பெருமையை
  பிறருக்கு கொடுத்து
  தான் மட்டும்
  சிறுமை பெறுகிறாள்
  பெண்...!!!// அருமை.....

  நல்லதோர் பகிர்வு....

  அனைத்து மகளிர்க்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 11. மகளிர் தின வாழ்த்துக்கள்...

  எப்போதும்...
  பெருமையை
  பிறருக்கு கொடுத்து
  தான் மட்டும்
  சிறுமை பெறுகிறாள்
  பெண்//

  வரிகள் அருமை...

  பதிலளிநீக்கு
 12. மகளிர் தின வாழ்த்துக்கள். இதனை மகளிரை விட ஆண்கள்தான் அதிகம் சொல்லியிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 13. மகளிர் தின சிறப்புப் பதிவு அருமையிலும் அருமை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. பெண்ணின் பெருமையாக உங்களின் பெருமையை நீங்கள் கவிதை வடிவில் சொல்லி இருந்த விதம் மிக அருமை. சகோதரிக்கு எனது மகளிர்தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!///


  தோழர்களும் சொல்லலாமே..
  மகளிர் தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. பெண்களின் பெருமைகளை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் சகோ. கவிதையும் அருமை.

  அந்த மைமோசா பத்தி. (பேரு நல்லாத்தான் இருக்கு. எனக்கென்னமோ சமோசா தான் ஞாபகத்துக்கு வருது.)

  அந்தப் பூ பார்க்க மிகவும் அழகாக இருக்குமாம். அதாவது அதன் Character, Presentation போன்று பெண்களின் நிலை மாறவேண்டும் என்பதற்காக இந்த வழக்கத்தை 1945 லிருந்து தொடர்கிறார்களாம்.

  நன்றி!

  பதிலளிநீக்கு
 17. பெண்கள் இன்னும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்று சொல்லாமல் ஓரளவிற்கு அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற உங்கள் பார்வை மிகச்சரியானது,
  மகளிர் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. மகளிர் தின வாழ்த்துக்கள் . அருமையான பதிவு .

  பதிலளிநீக்கு
 19. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
  " பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா " என்ற பாரதியின் வரிகளை நினைவு கூர்கிறேன்

  பதிலளிநீக்கு
 20. கவிதையும் கட்டுரையும்
  அருமை!
  கட்டுரையை ஒட்டிய கவிதை
  ஒன்று!
  என் வலையில்
  முடிந்தால் பாருங்கள்!  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 21. அழகான கவிதையுடன் அருமையான கட்டுரையும் சேர்த்து மகளிர் தினபதிவாக்கியிருக்கிறீங்க வாழ்த்துக்கள் ராஜி அக்கா!

  பதிலளிநீக்கு