புதன், மார்ச் 14, 2012

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்கஒருத்தருக்கு தொப்பை  இருந்தாலே எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. சரக்கடிப்பானோ?! எந்த வேலை வெட்டிக்கும் போகாம திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குவானோ இல்லை உடம்புக்கு சரியில்லையோன்னு நினைச்சுப்பாங்க. 

பஸ்சுல கூட்டத்துல நிக்குறதுக்கு சிரமம், ரெடிமேட் சட்டை, டிஷர்ட், ஃபேண்ட் சரியான சைசுக்கு கிடைக்காது. சின்ன சந்துல நுழைஞ்சு போக முடியாது, விடிகாலைல போர்வைக்குள்ள சுருண்டு படுத்துக் கிடக்கும் சுகத்தை இழந்து வாக்கிங், ஜாக்கிங் போகனும், வெளிய விசேஷங்களுக்கு போனால் பசிச்சாலும் கொஞ்சமா சாப்பிடனும் (இல்லாட்டி, இப்படி திங்குறதுனாலதான் தொப்பை வந்திருக்குன்னு கேலிக்கு ஆளாகனும்), பிளட், சுகர்லாம் கரெக்டா செக்கப் பண்றீங்களான்னு தொப்பையா பார்த்துக்கிட்டே கேட்பாங்க. 

 இப்படி  சின்ன சின்ன இழப்புகளை தினம் தினம் சந்திக்கனும். ஆனா, தொப்பை இருக்குறதால நன்மைகளும் கிடைக்குதுங்க. அதனால, இனி தொப்பை இருக்குறவங்க, சங்கோஜப்படாம, சந்தோஷப்பட்டுக்கிட்டு உங்களை கேலி பண்றவங்ககிட்டயும் நன்மைகளை எடுத்து சொல்லுங்க.....
தொந்தி, தொப்பை, செல்லதொப்பைன்னு பல பேர்களால் ஆசையுடன் அழைக்கும் தொப்பையின் நன்மையை பற்றி இனி காண்போம்....

1. கீழே குப்புற விழுந்தா முகத்தில அடிபட்டு மூக்கு உடையாம தொப்பைதான் காப்பாத்தும். 

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துது. உதாரணத்துக்கு பெரிய பெரிய தொந்திகளை இருக்குற  போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் வரும். அதுப்போல உங்களையும் பெரிய போலீஸ் ஆபீசர்ன்னு நினைச்சு எல்லாரும் பயந்து ஒதுங்குவாங்க.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுது. உதாரணத்துக்கு வேலையில்லாமல் சும்மா உக்காந்திருக்கும் போது தொந்தியை மெதுவாக வருடிக்கிட்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

5. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்க பார்க்கலாம். ஏன்னா. ஒருத்தரோட  தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமா இல்ல  செவ்வகமாக இல்லாம உருண்டை வடிவத்தில இருக்துது?ன்னு எல்லார்  மனதசுலயும் கேள்வி எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
ஜெய் தொந்தி!

நன்றி: மெயில் அனுப்பிய புண்ணியவானுக்கு...,

37 கருத்துகள்:

 1. ..நன்றி: மெயில் அனுப்பிய புண்ணியவனுக்கு

  Hஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 2. குறைக்க வேண்டியதை குறைக்க மாட்டோம் அதையும் நியாப்படுத்துவோம் நாம் தமிழர்கள் .

  பதிலளிநீக்கு
 3. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

  http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 4. 18+

  சமீபத்தில் செயற்கை முறையில் பெரிதாக்கப்பட்ட மார்பு ஒரு விபத்தில் ஒரு பெண்ணின் உயிர் காத்ததை போல் உள்ளது...கீழே குப்புற விழுந்தா முகத்தில அடிபட்டு மூக்கு உடையாம தொப்பைதான் காப்பாத்தும் -:)

  கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!ஜெய் தொந்தி -:)

  பதிலளிநீக்கு
 5. இப்படி சொல்லிட்டிங்களே மேடம் ..
  நீங்க நல்லவங்களா கெட்டவங்களா மேடம் ..

  பதிலளிநீக்கு
 6. தொந்தியின் மகிமையை படித்து தொந்தி குலுங்க சிரிக்கும்போது புரிந்ததது. சிரிக்கும்போதும் தொந்தி இருப்பது ஸ்பெசல் என்று

  பதிலளிநீக்கு
 7. நீங்க தொந்தியை பற்றி சொன்னது ஆண்களுக்கா அல்லது பெண்களுக்கா என்பது பற்றி தெளிவாக சொல்லப்படவில்லை.ஆண்கள் தொந்தியை பற்றி எப்போதும் கவலைபடுவதில்லை. அதனால் நீங்கள் சொன்னது தமிழக பெண்களை பற்றிதானே. சரிதானே

  நல்லபதிவு. நகைச்சுவையாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நக்கலாக சொல்லி இருக்கீறிர்கள். எத்தனை பேர் அதை புரிந்து உடல் நலத்தில் கவனம் செலுத்த போகிறார்களோ? அல்லது சிறிது சிரித்து தொந்தியை தடவி கொடுத்து போகப்போகிறார்களோ?

  பதிலளிநீக்கு
 8. தொப்பை மகாத்மியம் அருமை.இந்த சௌகர்யமெல்லாம் இப்போது எனக்கு இல்லாமல் போய் விட்டது(ஒரு காலத்தில் இருந்தது!)

  பதிலளிநீக்கு
 9. ஒரே மிரட்டல் தான் போங்க

  பதிலளிநீக்கு
 10. என்னாது.... தொந்தியை வளர்க்கறதா? வளர்க்க அது என்ன செல்லப் பிராணியாம்மா? நம்மாளுங்க சும்மாவே விநாயகருக்கே தொந்தி இருக்கறதால தான் சிறப்பும்பாங்க. இப்படி வேற சொல்லிட்டா... அம்புட்டுதேங்! ஹி... ஹி...

  பதிலளிநீக்கு
 11. பிள்ளையார் சதுர்த்தி வேற வருது... பொம்மை பற்றாக்குறை ஏற்பட்டு தொந்தி உள்ளவர்களை மூன்று நாள் மனையில் அமர வைக்காமல் இருந்தால் சரி

  பதிலளிநீக்கு
 12. thonthi patri solli kuraikka
  solreengalaa !
  illa kindal pannureenglaaa?

  eppadiyo sirikka vachiteengq!

  பதிலளிநீக்கு
 13. ஐயோ எனக்கு தொப்பையில்லையே... தொப்பை வரவதற்கு ஏதாவது ஐடியா இருக்குமா தங்கச்சி?

  பதிலளிநீக்கு
 14. என் அப்பாவுக்கு பெரிய தொப்பை றொம்ப கவலை படுவார் இனி படவேண்டாம் என்கிறேன்.....

  பதிலளிநீக்கு
 15. கடைசில எஸ் ஆயிட்டீங்களே ஹெஹெ!

  எஸ் ஆவது = தப்பிப்பது!

  பதிலளிநீக்கு
 16. அப்போ இனி தப்பேயில்லாமல் தொப்பை வளர்க்கலாம்.அடுத்த பதிவில் தொப்பை வளர்ப்பது எப்படி என்பதையும் அறியத்தரவும் ராஜி !

  பதிலளிநீக்கு
 17. நல்ல நகைச்சுவையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 18. ஆகா என்ன ஒரு சிந்தனை!!! இதை தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வெக்கனும்!!

  பதிலளிநீக்கு
 19. தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
  தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
  தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
  என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.
  எப்படி தலைவா இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க

  பதிலளிநீக்கு
 20. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 21. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசையை போல தொந்தியில் உள்ள பாதகத்துடன் இவ்வளவு சாதகங்களா ?முகத்தில் படும் அடியை தான் வாங்கி தலையைக் காக்கும் தொந்தியின் சேவை உண்மையில் மெச்சத்தக்கது.

  பதிலளிநீக்கு
 22. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  பதிலளிநீக்கு
 23. அப்படியா..நீங்கதான் எழுதிட்டீங்களோன்னு தப்பா நெனச்சிட்டேன் ஸாரி..

  பதிலளிநீக்கு
 24. அடி வாங்க போறீங்கள். அனுப்பியவரும் எழுதிய வரும் தான் வேறு யாரு...! விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாம ...ம்...ம்...ம்...ம் ரொம்ப ரசித்தேன்....! எல்லாரும் தொப்பையை வளர்க்க போகிறார்களே இதை கேட்டு.

  பதிலளிநீக்கு
 25. ஹா...ஹா....சிரிப்பிலும் ஒரு பொறுப்பு இருக்குங்கறதுக்கு உங்க பதிவுதான் சாட்சி!

  பதிலளிநீக்கு
 26. அட போங்கப்பா...குனியவும் முடியல நிமிரவும் முடியலே......காலுக்கு கீழ பூரான் ஓடுனாக்கூட பாக்க முடியல.........

  பதிலளிநீக்கு
 27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 28. ரஸித்தேன். :) பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  இதே சப்ஜெக்ட்டில் அடியேன் ஓராண்டுக்கு முன்பு [2011-மார்ச் மாதம்] வெளியிட்டுள்ள ஓர் நகைச்சுவைக் கவிதைக்கான இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
  உனக்கே உனக்காக !

  பதிலளிநீக்கு