திங்கள், மே 04, 2015

தெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்?

இந்து மதத்தில் இருக்கும் புராணங்கள் வெறும் கதைகள் அல்ல அதில் நிறைய மர்மங்களும் மனிதன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எதையெல்லாம் செய்யகூடாது  என கூறும் அனுபவ அறிவுரைகளாகும் இதில் முக்கியமானவை ராமாயணம் மற்றும் மகாபாரதம் என்னும் இரண்டு   இதிகாசங்களாகும் இதில் இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு ஒன்று செவிவழிக்கதைகள் இது தங்களது முன்னோர்கள் வழி பரம்பரை பரம்பரையாக சொல்லி கொடுத்து வருவது செவிவழி கதைகளில் ராவணனின் பராக்கிரமம் அதிகமாக பேசப்பட்டு இருக்கும் அவன் ஆயகலைகள் அறுபத்தினான்கும் நான்கு வேதங்ககளையும் கற்றறிந்தவன் என கூறபடுவதுண்டு  வாய்வழி மரபுகள் மற்றும் கிராமியவாசிகளாலும் கூட இந்த புராணங்கள்  இன்னமும் பேசபடுகிறது  அப்படிப்பட்ட ராமாயண கதைகளில் வரும் ராம லக்ஷ்மணன் பற்றிய அதிர்ச்சிகரமான  ஒரு நிகழ்வுதான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம்
இந்த பூமியில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை ஸ்தாபித்த பின்பு  விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் வைகுண்டம் மீளுவதாக ஐதீகம். ஸ்ரீராமரும் சரயு ஆற்றில் இறங்கி மறைந்து போவதாகவே பத்ம புராணம் தெரிவிக்கிறது.அது பற்றிய விவான பதிவு அடுத்த தொடரில் பார்க்கலாம் ..ஆனால் அவருக்கு நம்பிக்கைக்கு பாத்திரமான அவரது எல்லா கஷ்டங்களிலும் கூடவே நின்ற அவரது சகோதரன் லக்ஷ்மணனின் முடிவு எப்படி என்று நமக்கு தெரியுமா இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கின்றன முதல் கருத்து லக்ஷ்மணனை கொல்ல சொல்லி ராமபிரான் கட்டளையிட்டார் எனபது இதை கேட்கும் போது  நமக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது  இரண்டாவது கருத்து அவர் முடிவுகாலம் தெரிந்ததும் சரயு நதியில் மூழ்கி தன்னுடைய அவதாரத்தை முடித்துக்கொண்டார் எனபது  ஆனால் முதலில் சொல்லப்பட்டது போல  லக்ஷ்மணனுக்கு ராமபிரான் அளித்த மரண தண்டனை.எனபது அதிர்ச்சியான தகவல்தான்  தன் தம்பியறுள் லக்ஷ்மணனை மட்டும் அதிகமாக நேசித்த ராமபிரான் தான் அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்பது, ராமாயணம் அறிந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாகவே இருந்திருக்கலாம்
இந்த துர்ச்சம்பவம் நடக்க காரணமாக இருந்த நிகழ்வுகள் மற்றும் ராமபிரான் தன் தம்பியான லஷ்மணனை இப்படி தண்டிக்க என்ன காரணமாயிருக்கும் என்பதை பற்றி இபொழுது பார்க்கலாம் ராம ராவண யுத்தம் முடிந்ததும் ராமபிரான் வெற்றியோடு அயோத்திக்கு திரும்பினார் அதன் பிறகு ஒரு அரசனாக நீதிதவராமல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எல்லோரையும் சமமாக மதித்து நீதிதவராமல் அரசாட்சி புரிந்தார் அவருடைய அகண்ட ராஜ்யத்தை ராமரின் புதல்வர்களாகிய லவனும் குசனும்  ராமரின் தம்பிகளான பரதன் மற்றும் அவர்மனைவி மாண்டவிக்கு பிறந்த மக்களும் லக்ஷ்மணன் மற்றும் ஊர்மிளைக்கு பிறந்த மக்களும் சத்ருக்னன் மற்றும் அவர் மனைவி சுருதகீர்த்திக்கு பிறந்த மகன்களும் ராமரின் ஆலோசனை படி பலபிரிவுகளாய் பிரித்து ராஜ்யத்தை செவ்வனே ஆண்டு வந்தனர்.ஸ்ரீ ராமரும்  நாட்டு மக்களின் நலன்களுக்காக பல யாகங்களை செய்தார். அப்படி ஒரு நேரத்தில்தான் சீதையும் பூமா தேவியின் அழைப்பின் பேரில் பூமியில் சென்று மறைந்தார்.
இப்படி இருக்கையில் ஒருநாள் ராமரின் குலகுருவான வசிஷ்டர் அவரை சந்திக்க வந்தார். முக்கியமான சிலவிஷயங்களை பற்றி பேசவேண்டும் ஆகையால் தனிமையில் பேசவேண்டும் அபொழுது யாரும் குறிக்கிட கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்  இது மிகவும் ரகசியமான உரையாடல் அதை யாரும் கேட்க்க கூடாது என கூறியதால் ராமர் தனது நம்பிக்கைகுரிய தான் பெரிதும் நேசித்த தன தம்பி லக்ஷ்மணனை அழைத்து அந்த அறைகதவுகளை பாதுக்ககுமாறு கூறினார் தன அனுமதி இல்லாமல் அந்த அறையினுள் நுழைபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற ஆணையையும் லக்ஷ்மனைனிடம் தெரிவித்தார் 
கதவுகளை லக்ஷ்மணன் பாதுகாத்து கொண்டு நிற்கையில் அங்கே  நம்முடைய கோபக்கார முனிவர் துர்வாசர் வருகிறார் தன்னுடைய முன் கோபம் மற்றும் சாபங்களால் நன்கு அறியப்பட்டவர் இந்த துர்வாசமகரிஷி விதி விளையாட்டில் யாரும் தப்பமுடியாது என்பதை உணர்த்த வந்த துர்வாஷா மகரிஷி தான் உடனே ராமனை சந்திக்கவேண்டும் அதை ராமனிடம் தெரிவிக்குமாறு லக்ஷ்மனைனிடம் கூறினார் அவரை சமாதானபடுத்தி அண்ணன் முக்கியமான ஒரு விவாதத்தை வசிஷ்ட முனிவருடன் விவாதித்து கொண்டு இருக்கிறார் அதனால் கொஞ்சம் காத்திருக்க கூறினார் இதனால் கடும் கோபம் கொண்ட துர்வாசர் ராமனை பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்றால் அயோத்தியா மக்கள் அனைவரும் இயற்கை சீற்றம் கொண்டு இறந்துவிட சாபம் அளிப்பதாக  லக்ஷ்மணனை மிரட்டினார் துர்வாசரின் கொபதைகண்ட லக்ஷ்மணன்  குழப்ப நிலையை அடைந்தான் தன்னுயிரா இல்லை நாட்டுமக்களின் நலனா என குழப்பமடைந்தான் முடிவில் தன்னுயிரை தியாகம் செய்ய முடிவெடுத்தார் ராமனின் அறைக்குள் நுழைந்து துர்வாசரின் வருகையை ராமபிரானிடம் தெரிவித்தார் தான் அளிக்கும் சொல்லுக்காக நன்றாக அறியப்பட்டவர் ராமர் சட்டம் இயற்றிய படி லக்ஷ்மணனுக்கு மரண தண்டனை அளிக்கவேண்டுமே என கலங்கி நின்றார் ராமர் முடிவில் தான் கூறியதை போல் லக்ஷ்மணனுக்கு மரண தண்டனை நிறைவேற்றினார் இப்படியாக முடிந்தது லக்ஷ்மணனது சோக முடிவு
ஆனால் இதே சம்பவம் வாய்வழி மரபுகளில் வேறுவிதமாக கூறபடுகிறது  ஒரு நாள்  ஸ்ரீராமரை தேடிக் கொண்டு ஒரு முனிவர் வந்தார். அவர் ராமருடன் சிறிது நேரம் தனியாக பேச வேண்டும் எனவும், இடையில் யாரும் தங்களது தனி அறைக்குள் பிரவேசிக்கக் கூடாது எனவும் உத்திரவிட்டார். அவர்தான் காலதேவர் எனப்படும் யமன் .அதன்படி ராமர் அவரது தம்பி லக்ஷ்மணனை காவலாக வைத்துவிட்டு காலதேவரை பின்தொடர்ந்தார். யாராவது அப்படி அத்து மீறி நுழைந்தால் சாவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.   காலதேவர் ராமரை சந்தித்து அவரது அவதாரத்தின் நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும் அவர், வைகுண்டம் செல்லும் காலம் வந்துவிட்டது எனவும்  தான் அதை ஸ்ரீராமருக்கு ஞாபகப் படுத்த வந்திருப்பதாகவும் கூறினார் இப்படி ஸ்ரீராமரும் காலதேவரும் பேசிக் கொண்டிருக்கையில் அறைக்கு வெளியில் ஸ்ரீ ராமரை தாம்  உடனடியாக பார்க்கவேண்டும் என்று லக்ஷ்மனுடன் சண்டையிட்டு கொண்டிருந்தார்  கடும் கோபக்கார முனிவர் துர்வாசர்  லக்ஷ்மணன் எவ்வளவு மன்றாடியும் அவர் விடுவதாக இல்லை
ஸ்ரீராமரை பார்ப்பதில் பிடிவாதமாக இருந்தார் நமது துர்வாச முனிவர். உள்ளே தன்னை விடவில்லையானால் துர்வாச முனிவர், லக்ஷ்மணனுக்கு சாபம் அளிப்பேன் என்று கோபம் கொண்டதால் லக்ஷ்மணன் ஒன்றும் செய்வதறியாமல் குழப்பம் அடைந்தார். உள்ளே போனாலோ ஸ்ரீராமர் சொன்னது போல நமக்கு சாவு நிச்சயம். இவரை உள்ளே விடவில்லை என்றால் சாபம் நிச்சயம் என்ற நிலையில் லக்ஷ்மணனுக்கு இறைவனின் சித்தம் புரிந்தது. இது காலனின் விளையாட்டு. நாம் இந்த பூவுலகத்திலிருந்து விடை பெற வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்பதை முழுமையாக புரிந்துக் கொண்டார். காலனின் விருப்பதிற்கேற்ப தன்னிச்சையாக சரயு நதிக்குள் புகுந்து ஆனந்த சேஷசயனம் எடுத்துக் கொண்டார் என்றும் கூறபடுகிறது
லக்ஷ்மணனது முடிவை தெரிந்து கொண்ட ஸ்ரீராமர்  பாசதுயறால் துடித்தார் தனக்கும் காலன் அழைத்ததை ஏற்றுக் கொண்டு தனது இந்த அவதாரம் முடிந்தது என புரிந்துக் கொண்டு அனைவருக்கும் வணக்கம் சொல்லி லக்ஷ்மணனை தொடர்ந்து சரயு ஆற்றில் இறங்கி இந்த அவதாரத்தை நிறைவு செய்ய எண்ணினார்
உடனே தன தம்பிகளை அழைத்தார் பரதனுக்கு முடி சூடிவிட்டு தான் பூவுலகை விட்டு செல்லும் காலம் வந்து விட்டது என கூறினார் ..ராமரது முடிவும் அவரது முடிவிற்கு பின் வானர படைகள் என்ன வாயின என்னும் உண்மையை  நமது தெரிந்த கதை தெரியாத உண்மையின் அடுத்த பதிவில் பார்க்கலாம்

12 கருத்துகள்:

 1. ஸ்வாரஸ்யமாய் இருக்கிறது சகோ..அடுத்த பதிற்கு ஆவலாய்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ..அடுத்த பதிவு மட்டும் இல்ல எல்லா பதவுகளும் நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும் சகோ ..

   நீக்கு
 2. ஸ்வாரஸ்யமாய் இருக்கிறது சகோ..அடுத்த பதிற்கு ஆவலாய்....

  பதிலளிநீக்கு
 3. இதுவரை அறியாத கதை சகோதரியாரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில வாய்வழி கதைகள் அதாவது மரபுவழி கதைகள் நான் கேட்டதை வைத்து எழுதுகிறேன் ...நன்றி சகோ ..

   நீக்கு
 4. இதை இதுவரை நான் அறிந்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில மரபு வழி கதைகள் தாத்தா பாட்டிகள் மூலம் சிறுவயது பிள்ளைகளுக்கு சொல்லபடும் நாம தான் இப்ப பெரிவங்களை அவங்க சொல்கிற கதைகளை கட்டுகதைகளாக இல்ல நினைக்கிறோம் அந்த கதைகளை போல் அவர்களையும் பரணின் மேல் தூக்கி போட்டுவிட்டோம்.அவர்கள் கூறியதை சிறுவயதில் கேட்டதை வைத்து எழுதுகிறேன் ...

   நீக்கு
 5. அட...! ம்...

  அடுத்த பதிவையும் ஆவலாய்...

  பதிலளிநீக்கு
 6. நிச்சயம் சுவராஸ்யமாக இருக்கும் அண்ணா...

  பதிலளிநீக்கு
 7. முதல் கதை கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம்,
  இரண்டாவது கதை,
  லக்ஷ்மண் தன் அண்ணனின் சொல்லை மீறாதவன் எனவே தான் சரயு ஆறு நோக்கி செல்லமாட்டான்.
  சரி
  நான் கேட்பது இது தான்.
  நியாம் அறிந்த ராமன் எப்படி லக்ஷ்மணனை தண்டிக்கலாம்?
  தண்டனைக்கு உரியவர் முனிவர் தானே,
  கதை என்றாலும் பொருந்தனுமே,,,,,,,,,,,

  பதிலளிநீக்கு
 8. நம் பண்டைய வரலாறுகளில் முனிவர்களை தண்டித்ததாக வரலாறு இல்லை இரண்டாவது ராமன் மற்றும் லக்ஷ்மணன் இவர்கள் நாட்டுமக்கள் நலனுக்காகவே ஆட்சி செய்தவர்கள் தன்னுயிரா இல்லை நாட்டுமக்கள் உயிரா என வந்தபோது லக்ஷ்மணன் தன்னுயிரை தியாகம் செய்தார் ..ஒரு சாதாரண பிரஜையின் சந்தேகத்திற்காக தன்னுடைய மனைவியை பிரித்தவர் ஸ்ரீ ராமபிரான் ..ராமரின் அரசாட்சி பொற்காலம் என சொல்லப்பட்டது நாட்டில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்களாம் பெண்கள் குழந்தைகள் எல்லாம் எந்த இராத்திரி ஆனாலும் தைரியமாக எங்கும் பயமில்லாமல் சென்று வந்தார்களாம் இதையே காந்தி மகான் கூட குறிபிட்டு நாட்டில் ராம ராஜ்யம் நடக்கவேண்டும் என சொல்வதுண்டு ... மனிதனாக பிறந்துவிட்டால் விதி முடியும் நேரம் கர்ம பூமி என்று சொல்லப்படும் இந்த பூவுலகில் கர்மாவிற்கு கட்டுப்ட்டுதான் தங்கள் விதியை முடித்து கொண்டனர் மேலும் முக்கியமான வரி // ராமபிரான் வெற்றியோடு அயோத்திக்கு திரும்பினார் அதன் பிறகு ஒரு அரசனாக நீதிதவராமல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எல்லோரையும் சமமாக மதித்து நீதிதவராமல் அரசாட்சி புரிந்தார்// மேலும் வாகு தவறாதவர் நீதி தவறாதவர் என்ற சிறப்புகளும் பகவான் ஸ்ரீ ராமருக்கு உண்டு // தான் அளிக்கும் சொல்லுக்காக நன்றாக அறியப்பட்டவர் //இனி ராமர் கிருஷ்ணர் பாண்டவர்கள் இவர்களது முடிவுகளையும் பார்க்க போகிறோம் ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ ...

  பதிலளிநீக்கு
 9. அறியாத கதை தொடர்ந்து பகிருங்கள்.

  பதிலளிநீக்கு