Saturday, May 27, 2017

சிறார் வன்கொடுமை சட்டம் டிவிக்காரங்க மேல பாயாதா?! - கேபிள் கலாட்டா


தினமும் காலை 8. 45 மணிக்கு சன் டிவில நாட்டு மருத்துவம்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. நம் வீட்டு அடுப்படியில் இருக்கும் பொருட்களையும், வீட்டுக்கு அருகில் நம்மால் கண்டுக்கிடாம இருக்கும் அருகம்புல், அம்மான்பச்சரிசி, குப்பைமேனி, கீழாநெல்லி, முடக்காத்தான் முதற்கொண்டு சென்பகப்பூ, நெய், வாழைத்தண்டு, நெய், தேன் வரை அந்த பொருட்களில் மறைந்திருக்கும் சத்துக்கள் பற்றியும் சொல்லி, அம்மூலிகைகள் கொண்டு சாதாரண தலைவலி முதல் வெண்குஷ்டம் வரை போக்கும் வழிகளை அழகா மருத்துவர் சக்தி சுப்பிரமணியம் அய்யா சொல்றார். அய்யா சொல்ல சொல்ல அந்த மூலிகைகளை பக்குவப்படுத்தி மருந்தாக்கும் முறைகளை அய்யாவோட உதவியாளர் (பேர்தான் தெரில) செய்யுறது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்குது. இந்த குறிப்புகளை எழுதி வெச்சுக்கிட்டா சின்ன சின்ன நோய்களுக்கும் விபத்துகளுக்கும் முதலுதவியை வீட்டுலயே செஞ்சுக்கலாம்...
ஜீ டிவில சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 லிருந்து 7.30 வரை அதிர்ஷ்டலட்சுமி ஒளிப்பரப்பாகுது. கமல், மகாலட்சுமி தொகுத்து வழங்குறாங்க. அண்ணன் தங்கையோ, நட்போ, காதலர்களோ எந்த உறவா இருந்தாலும் இரண்டு பேர் கலந்துக்கலாம்.  சின்ன சின்ன விளையாட்டு நிகழ்ச்சிகள் வெச்சு நிகழ்ச்சி நடக்குது. ஏன் ஏன் கத்துறேங்குற ஒரு விளையாட்டுல  ஒருத்தர் காதுல ஹெட்போன்ல பாட்டு போட்டு வெளில இருக்கும் சத்தம் கேக்காத மாதிரி செய்திடுவாங்க. தொகுப்பாளர் கொடுக்கும் வார்த்தைய  இன்னொருத்தர் சத்தமா சொல்லனும். சைகைல உணர்த்த விடாம கைகளை கட்டி விடுவாங்க. சொல்ற வார்த்தைய கண்டுப்பிடிக்க முடியாம திணறுவதும், தப்பா சொல்லி மொக்கை வாங்குறதும் சிரிக்க வைக்கும். நிகழ்ச்சில தோத்தாலும் ஜெயிச்சாலும் ஆண்ட்ராய்டு போன், மிக்சி, வாட்டர் ஃப்யூரிஃபையர்ன்னு கிடைக்கும்.

நியூஸ் 7 டிவில ஃபீனிக்ஸ் பெண்கள்ன்ற நிகழ்ச்சி  ஞாயிறு மாலை 5.30க்கு ஒளிப்பரப்பாகுது.  பொதுவாவே, ஒரு லட்சியத்தை நோக்கி நடைப்போடுவது, அதை அடைவதும் ரொம்ப கஷ்டம். அதுவே பெண்ணுன்னா இன்னும் தடைகள் கூடும். அந்த தடைகளை உடைத்து சாதனை புரிந்த பெண்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிதான் இந்த ஃபீனிக்ஸ் பெண்கள். ஆசியாவின் முதல் பெண்  பேருந்து  ஓட்டுனரான வசந்தகுமாரி, மாதவிடாய் கொடுமை பத்தி ஆவணப்படமெடுத்த கீதா முதற்கொண்டு என்பது வயசுலயும் யோகா செய்து அசத்தும் பாட்டி, வீட்டு வேலை செய்யும் பெண்கள், மெரினாவை சுத்தம் செய்யும் பெண்கள்ன்னு இந்த பட்டியல் நீளுது...
ராஜ் டிவில  திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 5.30க்கு வெள்ளித்திரை நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இது சினிமா சம்பந்தப்பட்ட தகவல்களை கொண்டது.  சினிமா கிசுகிசுக்கள், சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகள், திரைக்கலைஞர்களின் பயோடேட்டா என இந்த நிகழ்ச்சியின் பட்டியல் நீண்டாலும் இந்த நிகழ்ச்சியோட ஹைலைட்டே ‘அந்த நாள் ஞாபகம்’ன்ற பேர்ல பழைய படங்கள் பற்றிய நினைவுகளை அழகா பகிர்ந்துக்கிறார் சித்ரா லட்சுமணன்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார், ஜூனியர் சூப்பர் சிங்கர், ஜூனியர் பிரபுதேவா....ன்னு விதம்விதமான தலைப்புகளில் குழந்தைகளை வெச்சு நிகழ்ச்சி நடத்துறது மட்டுமில்லாம நாடகத்துலயும் இப்ப குழந்தைகளை வெச்சு எடுக்குறது அதிகமாகிடுச்சு. ஸ்டேஜ் ஷோவில் மோசமான அங்க அசைவுகள், மோசமான பாடல்கள் வெச்சு பசங்களை கெடுக்குறாங்கன்னா நாடகங்களில் பெரியவங்களுக்கு சமமா சதி செய்யுறமாதிரியும், திருட்டு, காதல்ல துணைப்போற மாதிரியும் காட்டுறாங்க. அதைவிட கொடுமை மாந்த்ரீகம்,  பேய், பிசாசு அமானுஷ்ய நாடகத்துலயும் நடிக்க வெச்சு குழந்தைகள் மனசுல மூட நம்பிக்கை உண்டாக்குறதோடு பேய் பிசாசாவே நடிக்க வைக்குறாங்க. பதினெட்டு வயசுக்கு கீழ இருக்கும் பசங்க வேலை செய்யக்கூடாதுன்ற சிறார் வன்கொடுமை சட்டம் இந்த விசயத்துல எதும் செய்ய முடியாதா?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461420
Tamil Nadu kid , India: I am adopting from India, they 31 million children living in the streets. Clearly this gorgeous girl is well taken care of, but there are children in India without parents, hope, or love. Let's work and pray on their behalf for a better future and a loving home <3:
நன்றியுடன்,
ராஜி. 

18 comments:

  1. போரடிக்கும் வழக்கமான நிகழ்ச்சிகள் இல்லாமல் நல்ல பொழுதுபோக்கு மற்றும் பயனுள்ள நிகழ்ச்சிகளின் தொகுப்பு...நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  2. நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளும் உண்டு
    த.ம

    ReplyDelete
    Replies
    1. என் கண்ணுக்கு தெரியுறதுலாம் இது மாதிரியான விசயங்கள்தான் சகோ. ஏன்னா எனக்கு டிவி பார்க்க எனக்கு பிடிக்காதே.

      Delete
  3. தினெட்டு வயசுக்கு கீழ இருக்கும் பசங்க வேலை செய்யக்கூடாதுன்ற சிறார் வன்கொடுமை சட்டம் இந்த விசயத்துல எதும் செய்ய முடியாதா?! Strongly agree... More over they are tortured to cry in front of camera just to make it more appealing... Too Bad. Those days, once the competion is over, only winners would be called to stage. But today, They are making all stand in the stage and then eliminate just to capture reaction... Guess there are chances for public litigation!!!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் இப்படி அழ வெச்சா மனநிலை பாதிக்காதா?!

      Delete
  4. #வீட்டுலயே செஞ்சுக்கலாம்#
    நாம என்னைக்கு உருப்படியான காரியத்தைச் செய்திருக்கோம் :)

    ReplyDelete
    Replies
    1. சேர்வார் சேர்க்கை அப்பிடி

      Delete
  5. தோற்றாலும், ஜெயித்தாலும் பரிசா? அட!
    \

    ReplyDelete
  6. சில நிகழ்ச்சிகள் இன்று தான் அறிந்து கொண்டேன்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இருக்குண்ணே

      Delete
  7. சிறப்பான தொகுப்பு ராஜி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  8. முதல் மருத்துவ நிகழ்ச்சி..உறவினர் வீட்டில் பார்த்திருக்கிறேன்..மற்றவை உங்கள் மூலம்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இனி பாருங்க நல்ல நிகழ்ச்சிகளும் கிடைக்கும்

      Delete
  9. தொகுப்பு அருமை
    கேள்வியும் சூடு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete