சனி, ஜூலை 01, 2017

இது ரியாலிட்டி ஷோ இல்ல ஃபேக்காலிட்ட்டி ஷோ - கேபிள் கலாட்டா

ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமே இல்லாத பிரபலங்கள் 16 பேரை ஒரே வீட்டில் 100 நாள் தங்க வச்சு அவங்க நடவடிக்கைகளை படம்பிடிச்சு காட்டுற ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்ன்ற பேர்ல   விஜய் டிவில ஒளிப்பரப்பாகுது. இந்நிகழ்ச்சியோட அம்பாசிடர் கமலஹாசன். கமல் அறிவுஜீவின்னு இத்தனை நாளாய் நினைச்சிட்டிருந்த அவரோட பிம்பம் இந்த நிகழ்ச்சி மூலமா உடைஞ்சுப்போச்சு. ஒரு மூணு நாள் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். இதுக்கு சீரியல் பெட்டர்ன்னு சேனலை மாத்திட்டேன்.   வீடு முழுக்க 30 கேமராக்கள் வச்சிருக்காங்கன்னு முன்னமே சொன்னாலும், பிக்ஸ்ட் கேமராவுல முகம், கை, பொருள்ன்னு க்ளோஸ் அப்ல வருமா!? காலண்டர், கடிகாரங்கள், செல்போன், டிவின்னு வெளியுக தொடர்புகள் கிடையாதுன்னு அறிவிச்சாங்க. ஆனா, நிகழ்ச்சில கலந்துக்கிட்ட ஒருத்தங்களுக்கு பொறந்த டேன்னு சரியா நடி 12 மணிக்கு கேக் வெட்டுறாங்க. அது எப்படி?!  கேமராவுல பதிவாகும்ன்னு தெரிஞ்சும் பிரபலங்கள் சண்டை போடுவாங்களா?! இல்ல அடுத்தவங்களை கீழ்த்தரமா பேசுவாங்களா! கமலின்  படங்கள் கமர்ஷியலா வெற்றியடையலைன்னாலும் எதாவது ஒரு விஷயத்துல கலக்கி இருப்பார். இந்த நிகழ்ச்சி ஊரு உலகமே பேசினாலும் கமலுக்கு கெட்ட பேர்தான்... ? இது ரியாலிட்டி ஷோ இல்ல... ஃபேக்காலிட்டி ஷோ...

அடிமட்டத்திலிருந்து வெற்றி பெற்று பெரிய பேரு, பதவி, பணம், புகழ், விருதுன்னு வாங்கி ஊர் மெச்ச இருப்பவங்களைதான் டிவில பேட்டி காணுவாங்க. ஆனா, அதைவிட தினம் தினம் சவால்களை எதிர்கொண்டு வாழும் பூ விற்பவர், பழம் விற்பவர், சலவை செய்பவர், இஸ்திரி போடுபவர், ஆட்டோ ஓட்டுபவர், செருப்பு தைப்பவர்ன்னு சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவங்களை  சாமானியரின் குரல்ன்னு புதிய தலைமுறையில் பேட்டி கண்டு ஒளிப்பரப்புறாங்க. இந்த நிகழ்ச்சி ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. நாளைக்கு கானா பாடல்களை பாடும் இளைஞனின் பேட்டி ஒளிப்பரப்பாக போகுது.


வசந்த் டிவில தினமும் காலை 7.00 மணிக்கு ஆலய தரிசனம்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதுல சின்ன சின்ன கிராமங்களில் இருக்கும் வெளிச்சத்திற்கு வராத புராதான கோவில்களை பத்தி ஒளிப்பரப்பாகுது. கோவில் அமைவிடம் வழித்தடம், வரலாறு பூஜை, விழாக்கள்ன்னு விளக்கமா சொல்றாங்க.நல்லது கெட்டதுன்னு ஆராயும்  ஆறறிவு கொண்ட மனுஷங்களே நாலு பேரு சேர்ந்திருந்தா தினமும் நாலு சண்டை வருது. யோசிக்கும் திறன் இல்லாத மிருகங்கள் எப்படி இருக்கும்?! அதுங்களுக்குள் நடக்கும் சண்டைகளை நேஷனல் ஜியாகரஃபிக் வைல்ட் சேனல்ல தினமும் மாலை 7 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. பாருங்க...

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465085

நன்றியுடன்,
ராஜி. 

18 கருத்துகள்:

 1. பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் கீழ்த்தரமாக இருக்கு உடை மாற்றும் இடத்தில்கூட கேமரா என்றால் என்ன அர்த்தம் இதில் வரும் பெண்கள் மிக மோசமாக உடையணிகின்றனர் குடும்பத்துடன் பார்ப்பதா ? என்ன ?

  இதை விட்டு வெளியே வந்த பிறகு இந்த 16 பேருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் ஆவது நிச்சயம்

  கமல் பணத்துக்காக இவ்வளவு கீழிறங்கி இருக்க வேண்டாம்ஃ.
  த.ம.1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜூலி, ஸ்ரீ..... ஓவியா, ஆரவ்க்குள் காதல்ன்னு ஒரு பில்ட் அப்... சாதாரணமா பார்த்துக்குறதைக்கூட பில்ட் அப் கொடுக்குறாங்க. டூயட் இல்லாத குறைதான்

   நீக்கு
 2. நான் ஒரே ஒரு நாள் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்தேன். சுகபோகிகளுக்கான வசதிகள். பெண்களின் இறுக்கமான உடைகள். உதவாக்கரை உரையாடல்கள்.....மனம் வெறுத்தது. பார்ப்பதைத் தவிர்த்துவிட்டேன்.

  டிஸ்கவரி, ஜியாகரஃபி..., அனிமல்பிளானெட் போன்றவை மட்டுமே பார்க்கிறேன். கருமாந்தரத் தொடர்களையெல்லாம் பார்ப்பதே இல்லை.

  பதிலளிநீக்கு
 3. பணம் என்ன வேண்டுமென்றாலும் செய்யும்...

  பதிலளிநீக்கு
 4. எல்லாமே நாடகம் ,இது எப்படி ரியாலிட்டி ஷோ ஆகும் :)

  பதிலளிநீக்கு
 5. அதுகளை பார்க்க எனக்கு கொடுப்பினை இல்லை...

  பதிலளிநீக்கு
 6. அதுகளை பார்க்க எனக்கு கொடுப்பினை இல்லை...

  பதிலளிநீக்கு
 7. தொலைக்காட்சி நிகழ்வுகள் குறித்த
  தகவலும் விமர்சனமும் அருமை
  தற்சமயம் இங்கு (அமெரிக்காவில் ) இருப்பதால்
  இங்கு தொலைக்காட்சிகளில்
  இதை விட அருமையான ரியாலிட்டி ஷோக்கள்
  ஒலிபரப்பப்படுவதால் தமிழ்த் தொடர்கள்
  தற்சமயம் அவ்வளவாகப் பார்ப்பதில்லை
  வந்துத் தொடரவேண்டும்
  அதற்கு தங்கள் பதிவுகள்னல்ல வழிகாட்டியாக
  இருக்கிறது
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா கேபிள் கலாட்டா தொடரும்...

   நீக்கு
 8. தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் போலவே ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறார்கள்!!!!

  பதிலளிநீக்கு
 9. Bigboss பார்த்துக்கொண்டு வருகிறேன். பிரபலங்கள் சண்டை போடுவதுதான் பார்க்க என்னவோ போலிருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சண்டை போடுறதுலாம் ஸ்கிரிப்ட் போல. எனக்கு தெரிஞ்சு நமீதாவும், வையாபுரி, கணேஷ் வெங்கட்ராமன், சக்தி வாசு, ரைசாதான் இயல்பா இருக்காங்க. ஆர்த்தி, காயத்திரி, ஜூலி, சினேகன், பரணிலாம் ஓவர் ஆக்டிங்க்

   நீக்கு
 10. ஐயோ ராஜி..பிக்பாஸ் எல்லாம்ஒரு ஃப்ரோக்ராமா? டுபாக்கூர். எல்லாம் தெரிஞ்சேதான் நடக்குது. இயல்பு இல்லை... என் மாமியார் வீட்டுல இருந்தப்ப சேனல் மாத்தினாங்க அப்ப ஒரு சில நிமிடங்கள் பார்த்தேன் கடுப்பாயிட்டேன்..மாத்தச் சொன்னேன் நல்ல காலம் மாத்திட்டாங்க.....ஆனா சீரியல்..மீ எஸ்கேப் அடுத்த ரூமுக்கு!!!

  கீதா

  பதிலளிநீக்கு