வியாழன், ஜூலை 06, 2017

நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலை - கைவண்ணம்

எங்க தெருவிலிருக்கும் ஒருத்தங்க பெண் குழந்தை பெரிய மனுஷியாகிட்டா. அவளுக்கு தலைப்பின்னிவிட என்னை கூப்பிட்டாங்க. எல்லா அலங்காரமும் முடிஞ்சபின் பார்த்தா நெத்திச்சுட்டி இல்ல. எங்க வீட்டு பொண்ணுங்கக்கிட்ட கேட்டாலும் இல்லன்னு சொல்லிடுச்சுங்க. யார்க்கிட்ட கேக்கலாம்ன்னு யோசிக்கும்போது, அங்க இங்க ஏன் கேக்கனும்ன்னு அரை மணிநேரத்துல செஞ்சு கொண்டு போய் கொடுத்துட்டேன். அந்த பொண்ணுக்கும் ரொம்ப சந்தோசம்... எங்க சித்தியே செஞ்சுக்கொடுத்ததுன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்தா. இப்ப இதேமாதிரி தங்களுக்கும் செஞ்சுத்தரசொல்லி சிலர் கேட்டிருக்காங்க. 
முப்பது இழைகள் கொண்டதா மூணு இழைகளை எடுத்துக்கனும்...
அதை தலைப்பின்னுற மாதிரி கொஞ்சம் லூசா பின்னிக்கனும். டைட்டா பின்னுனா கோணிக்கும். நேரா வராது. 
பின்னி முடிச்சதும் மடிச்சு ரெண்டுத்தையும் க்ளூ போட்டு ஒட்டிக்கனும்.
நடுவில் கற்களும், அதைச்சுத்தி கோல்ட் மணியும் வச்சு ஒட்டியாச்சு.
தலைமுடியில் மாட்ட கொக்கி வைக்க பீட் வச்சு கம்பியும் வச்சாச்சு.
நெத்திச்சுட்டியின் நுனியில் தொங்க ஒரு பதக்கத்தை கேன்வாஸ் துணியில் ரெடி பண்ணியாச்சு.
பதக்கத்தை ஒட்டியாச்சு...
இன்னும் அழகுப்படுத்த பதக்கத்தின் கீழ குஞ்சலம்....
அழகான நெத்திச்சுட்டி ரெடி.
பாப்பாக்கு பரிசளிக்க வளையல்.....
கழுத்துமாலை.....
கம்மல், வளையல், கழுத்துமாலைன்னு ஒரு செட் பாப்பாக்கு பரிசா கொடுத்தாச்சு. அவளுக்கும் ரொம்ப சந்தோசம்.  எனக்கும் திருப்தி.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465533
A craftswoman paints hand made wood figurines while straddling her daughter on her back.
நன்றியுடன்,
ராஜி.

24 கருத்துகள்:

 1. ஆஹா அருமையாக இருக்கிறதே.... உடனடி ஸ்பெஷல்
  தமனாவைக் காணவில்லை.பிறகு வருவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெட்டு சதிப்பண்ணிடுச்சுண்ணே. அதான் அப்டேட் ஆகல

   நீக்கு
  2. தளத்தில் நுழைந்தவுடன் ஓட்டைப் பதிவு செஞ்சுடணும். பின்னூட்டம் போட்டுவிட்டுப் பார்த்தால்
   சில நேரங்களில் மறைந்துவிடும்[என் அனுபவத்தில் அறிந்தது].

   முதலில் ஓட்டு. அப்புறம் கருத்துரை.

   நீக்கு
 2. அருமையாய் செஞ்சு இருக்கீங்க....கம்மல், வளையல், கழுத்துமாலை ..எல்லாம் அழகு..

  நெத்திச்சுட்டி சூப்பர் ஐடியா...  கோல்ட் மணிக்கு நடுவில் உள்ள கற்களுக்கு என்ன பெயர்...எப்படி சொல்லி கேட்கணும்..அது மட்டும் இன்னும் நான் வாங்கல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரன்னிங்க் ஸ்டோன்ப்பா. வெள்ளை நிறம்ன்னா மீட்டர் 25ரூபா. மத்த கலர்ன்னா 30ரூபா. எல்லா கலர்லயும் வெவ்வேற சைஸ்ல இருக்குங்க.

   நீக்கு
  2. oh.. ரன்னிங்க் ஸ்டோன்னா...தேங்க்ஸ் கா...

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிண்ணே

   நீக்கு
 4. அழகாக இருக்கிறது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. கண்ணைக் கவரும் காதணிகள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சகோ

   நீக்கு

 6. மிக அருமை.. திறமை நிறைய உங்கள் கைவசம் இருக்கிறது ஆனால் அதை நீங்கள் முறையாக பயன்படுத்தாமல் இருக்கிறீர்களோ என்று நினைக்கிறேன்....திறமையை வெளிப்படுத்தி வெற்றி காணுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் உங்க மாப்பிள்ளை சரியில்லண்ணே. நீங்க என்னை அமெரிக்காவுக்கு கூட்டி போங்க. நாம பெரிய பிசினெஸ் காந்தமாகிடலாம்.

   நீக்கு
 7. அருமையான அறிமுகம் ...
  வகுப்பில் பயன்படுத்த முடியுமா என பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. அழகாக செய்து விட்டீர்கள்.
  எவ்வளவு திறமைகள் உங்களிடம்!
  வாழ்த்துக்கள் ராஜி.

  பதிலளிநீக்கு
 9. ​​கலர்ஃபுல்! நன்றாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. செம கலக்கிட்டீங்க ராஜி!! வெரி வெரி கலர்ஃபுல்!! ரொம்ப அழகாவும் இருக்கு...என் இளம் வயதை நினைவு படுத்துது..இப்பவும் ஆர்வம் இருந்தாலும்...சூழல் சரியாக இல்லை..

  நீங்கள் செய்திருக்கும் நெத்திச் சுட்டி போல டூ இன் ஒன் நாங்க காலேஜ் படிக்கும் போது வுல் நூல் இருக்கு இல்லியா அதுல செஞ்சுருக்கேன். படிச்சது எக்கனாமிக்ஸ். ஸோ எந்தப் போட்டில கலந்துகிட்டாலும் டிப்பார்ட்மென்ட்ல பைசா செலவு பண்ணாம சிக்கனமா வெல்த் ஃப்ரம் வேஸ்ட்னு தான் செய்யணும்னு சொல்லிடுவாங்க...படித்தது பெண்கள் கல்லூரியாச்சே. கல்யாணம் ஆகிப் போனா சிக்கனமா குடும்பம் நடத்தணும்னு ஊதாரியா இருக்கக் கூடாதுனு இப்படி ஒரு நியதி...எங்களைப் பழக்கறாங்களாம். ஆனா சத்தியமா இதுவரை அது எனக்கு ரொம்பவே உதவுது நம்ம கற்பனையைத் தட்டி விட்டு, லேட்டரல் திங்கிங்க் ...நீங்க கூட அதேதான்..

  மீந்து போன வுல்லுல நான் பின்னல் போட்டு தலைமுடில வைச்சு ரிப்பன் போல குஞ்சலம் போல என்று செய்வதுண்டு. அதையே இப்ப நீங்க செஞ்சுருக்கறா மாதிரி பின்னல் போட்டு ரெண்டா ஒட்டி, அப்ப எல்லாம் கொக்கி கிடைக்காதே தனியா அதனால ஹேர்பின் வைச்சு தலைல குத்திட்டு...சுட்டிக்குப் பதக்கம் மாதிரி செய்ய அதே பின்னல் போட்டு அதை ரவுண்டா சுத்தி ஒட்டிட்டு அல்லது நூல் வைச்சு அங்கங்கக் கட்டிட்டு...அதுல பாசி வைச்சு ஒட்டி அல்லது நூல் வைச்சு டைட்டா கட்டி..பிஞ்சு போய் கீழ விழுந்து.பொருக்கி வைச்சுருக்கற கல்லு வைச்ச பட்டன் எலலம் ஒட்டி (சணல் இருக்குல அதிலயும் செய்துருக்கேன்..) அப்பலாம் இந்தக் குறத்தி மாதிரி ஸ்கூல் காலேஜ் மண்ணுல இருக்கற பாசி பட்டன் எல்லாம் பொறுக்கி வைச்சு அது ஒரு கலெக்ஷன்..ஹஹஹ்
  பொட்டலம் கட்டி வர சணல்ல கூட பின்னல் போட்டு ரவுண்டா எந்த அளவு வேணுமோ அந்த அளவு சைஸ் ஒரு சின்ன பேசின் வைக்கறா மாதிரி....அளவுல செஞ்சு (சதுரமாவும் செய்யலாம்...) டேபிள் மேட்டாவும் யூஸ் பண்ணலாம்...வுல்லுலயும் தான்...கலக்குங்க ராஜி!!! நல்ல கற்பனை, திங்கிங்க்...பாராட்டுகள்!! வாழ்த்துகள்! நீங்க பிஸினஸ் பண்ணலாமே!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிசினெசா?! இதையா?! எங்க ஊர்ல இதுக்கு வசதி இல்லீங்க கீதாக்கா...

   நானும் அப்படிதான் கண்டதை பொறுக்கி சேமிச்சு வைப்பேன். சோம்பேறித்தனத்தை விட்டா நிறைய செய்யலாம். நேரம் நிறைய இருக்கு. ஆனா, பாழாப்போன சோம்பேறித்தனத்தை என்ன செய்யுறதுன்னு தெரில கீதாக்கா

   நீக்கு