Sunday, September 17, 2017

நினைச்சதெல்லாம் நடந்திடுச்சா?!.. நினைச்சகிளி பறந்திருச்சா?!

பொதுவா காதல் தோல்வி பாட்டுன்னா காதலன்/காதலியோட அருமை பெருமைலாம் சொல்லி,, இப்படிலாம் இருந்தோம்.. இப்படிலாம் இருக்க நினைச்சோம். ஆனா, விட்டுட்டு போய்ட்டாள்/ன்ன்னு புலம்புறதாதான் இருக்கும்..  இல்ல, காதல் தோல்வில இருக்கவுங்களுக்கு புத்தி சொல்லுற பாட்டா இருந்தா உன் அப்பாவை பாரு, உன் அம்மாவை பாரு, உன் பொண்டாட்டிய பாரு, புருசனைப்பாருன்ற மாதிரியோ, இல்லாட்டி போனா போறான் விடுன்ற மாதிரிதான் இருக்கும். ஆனா, இன்னிக்கு கேக்க போற பாட்டு காதல் தோல்வியை நையாண்டி பண்ணுற மாதிரி இருக்கும்.  காதல் தோல்வி வலியிலும் செம கிண்டலா இருக்கும். இந்த படத்து பாட்டுலாம் செம ஹிட்.. ஆனா, படம் படு மொக்கை...
இளையராஜா இசையமைச்சதோடு அவரே பாடி இருக்கார். அப்ப அந்த பாட்டு எப்படி இருக்கும்ன்னு சொல்லவா வேணும்?! கார்த்திக், திலீப்ன்னு நடிச்சிருப்பாங்க. முதல்ல திலீபன் காதல் தோல்வில இருக்கும்போது கார்த்திக் தேத்தி பாடியிருப்பார். அதே காதல்தோல்வில கார்த்திக் இருக்கும்போது.. பல்வலியும்,தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்ங்குறமாதிரி கிண்டலடிச்சு திலீபன் பாடுவார்.. யார் எழுதுனதுன்னு தெரில. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..  இந்த பாட்டுல கிடாரும், புல்லாங்குழலும், சோகத்தை சொல்லவே பிறந்த வயலின்ன்னு இந்த பாட்டை ஹிட்டடிக்க காரணமாச்சு. 


வாயக்கட்டி வயித்தக்கட்டி
 கண்ணகட்டி காதகட்டி 
என்னென்னவோ படிச்ச மச்சான் 
நெஞ்சில் ஒரு வீடு கட்டி வீட்டில் ஒரு கூடு
கட்டி ஒருத்தியதான் நினைச்சேன் மச்சான்..
நினைச்சதெல்லாம் நடந்திடுச்சா?!..
நினைச்சகிளி பறந்திருச்சா?! 
என்னை  மட்டும் சொன்னதென்ன
கிளியே... 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471894
நன்றியுடன்,
ராஜி. 

3 comments:

  1. படம் சொல்லத் துடிக்குது மனசு .

    மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
  2. அருமையான பாடல்....படம் ஸ்ரீராம் சொல்லிவிட்டார்!!!

    ReplyDelete