Thursday, September 21, 2017

படிப்படியாய் முன்னேற்றம் தரும் நவராத்திரி விரதம்


கணவனான சிவனுக்கு ஒரு இரவு.. அண்ணனான பரந்தாமனுக்கும் ஒரே ஒரு இரவு. ஆனா, அனைத்து உயிர்களுக்கும் படியளிக்கும் அன்னையான பராசக்திக்கு ஒன்பது இரவுகள். அதுதான் நவராத்திரி விழாவாகும். பெண் தெய்வங்களை முன்னிறுத்தி பல விழாக்கள் நம்மூர்ல கொண்டாடப்படுது. அதுல முக்கியமானது நவராத்திரி  விழாவாகும். முழுக்க முழுக்க பெண்களால், பெண்களுக்காக, பெண் தெய்வங்களை முன்னிறுத்தி கொண்டாடப்படுது இந்த விழா...  புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியிலிருந்து தசமி திதி வரை கொண்டாடப்படுது.  சித்திரையும், புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்கள் எமனின் கோரப்பற்கள்ன்னு சொல்லப்படுது. இந்த மாசத்துல நோய்த்தொற்று அதிகமா இருக்கும்.  அதனை போக்கவே உடலுக்கு சக்தி கொடுக்க வேண்டி சக்திதேவியை வழிப்படுகிறோம். சித்திரை மாசத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுது.


ஒருசில கோவில்களில்  பிரம்மோற்சவ விழான்னு பத்து நாள் கொண்டாடப்படுது. அதேமாதிரி வீட்டுல கொண்டாடும் இந்த பத்து நாள் திருவிழாவை வீட்டின் பிரம்மோற்சவம்ன்னு சொல்லுறதுல தப்பே இல்ல. இந்த நவராத்திரி விழா இந்தியா முழுக்கவும், இந்தியர்கள் இருக்கும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுது. இந்த விரதத்தை வயசு வித்தியாசமில்லாம எல்லா பெண்களும் கொண்டாடுவர்.  இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால்  திருமணப்பேறும், குழந்தைப்பேரும், வீட்டில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஒருமுறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.


துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வதம் செய்ததன் நினைவாக கொண்டாடப்படுவதே நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமின்னும் சொல்லப்படுது.

லட்சுமிதேவி, அலர்மேலுமங்கையாய் அவதரித்து திருப்பதி வெங்கடேசப்பெருமாளை அடையும்பொருட்டு இந்த விரதத்தை மேற்கொண்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுது.

சுரதா என்ற மன்னன்  தன் எதிரிகளை அழிப்பதற்காக வேண்டி தன் குருவின் ஆலோசனைப்படி காளியின் உருவத்தை தூய களிமண்ணால் செய்து உண்ணாவிரதமிருந்து  அம்பாளை வேண்டிக்கொள்ள,  அதன் பலனாக எதிரிகளை அழித்து  ஒரு புது யுகத்தையே உண்டு பண்ணினான் என்பது நம்பிக்கை.  ஐம்பூதங்களிலான சிற்பங்களைக்கொண்டு தன்னை வழிப்படுவோர் அனைத்து பாக்கியங்களையும் பெறுவர் என தேவிப்புராணத்தில் சொல்லப்படுது.  நவராத்திரியின் சிறப்பம்சம் கொலு வைப்பதாகும்.  கொலு என்பது படிப்படியாக படிகளை அமைத்து ஐம்பூதங்களால் ஆன பொம்மைகளை வைத்து வழிப்படுவதாகும்.  ஒன்பது படிகளை கொண்ட அமைக்கவேண்டியது என்பது விதின்னாலும், அவரவர் வசதிக்கேற்ப கொலுப்படிகள் அமைக்கலாம்.

கொலுவின் கீழிருந்து முதல்படியில் புல், பூண்டு மாதிரியான ஓரறிவு ஜீவன்களையும், இரண்டாம் படியில் நத்தை, சங்கு மாதிரியான ஈரறிவு ஜீவன்களையும், மூன்றாவது படியில் கறையான், எறும்பு மாதிரியான மூவறிவு கொண்ட ஜீவன்களையும், நாலாவது படியில் நண்டு, வண்டு மாதிரியான நாலறிவு கொண்ட ஜீவன்களையும், ஐந்தாம் படியில்  மிருகங்கள், பறவைகள் மாதிரியான ஐந்தறிவு ஜீவன்களையும், ஆறாவது படியில் மனிதர் உருவில் வாழ்ந்த மகான்களையும், மனிதர்கள்ன்னு ஆறரிவுக்கொண்ட ஜீவன்களையும்,  ஏழாவது படியில் சித்தர்கள், ரிஷிகள்மாதிரியானவர்களையும், எட்டாம் படியில் இந்திரன், தேவர்கள், நவக்கிரங்கங்கள் மாதிரியானவர்களையும், ஒன்பதாம் படியில்  பிரம்மா, விஷணு, சிவன், முருகன், அம்பிகைன்னு தெய்வங்களின் உருவ பொம்மைகளையும் வைத்து வழிப்பட வேண்டும்.


நவராத்திரியின் முதல்நாளில் சக்தியை சாமுண்டியாகவும், இரண்டாவது நாள் வராகி தேவியாகவும் , மூன்றாவது நாளில் இந்திராணியாகவும், நான்காம் நாள் வைஷ்ணவிதேவியாகவும், ஐந்தாம் நாள் மகேஸ்வரியாகவும்,  ஆறாம் நாள்  கவுமாரி அம்மனாகவும்,  ஏழாம் நாள் மகாலட்சுமியாகவும், எட்டாம்நாள்  நரசிம்மகியாகவும், ஒன்பதாம்நாள் பிராக்மியாகவும் நினைத்து வழிப்படவேண்டும். 


நவராத்திரி கொலுவில் கீழே உள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும். அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்; மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும். வந்ஹி துர்கா, வன துர்கா, ஜல துர்கா, ஸ்தூல துர்கா, விஷ்ணு துர்கா, பிரம்ம துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா போன்ற அன்னைகளின் சக்திகளை ஒவ்வொரு உயிரும் வாழ்வில் பெற்றிருக்கும். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நவராத்திரி விழாவில் தேவதைகளைச் சிறப்பிக்க வேண்டும். நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம். நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒவ்வொரு நவதானியமாக ஒன்பது வகை சுண்டல் செய்து கடவுளுக்குப் படைத்து வழிபடுவர்.


கோதுமை, பச்சரிசி,  துவரை,  பச்சைப்பயறு,  கடலை,  மொச்சை,  எள்ளு,  உளுந்து,  கொள்ளுவினால் ஆன சுண்டலை தினத்துக்கொன்றாக வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.  கொலு பார்க்க வரும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் பாக்கு, தேங்காய், வளையல், சீப்பு, தட்டு மாதிரியான பொருட்களை கொடுத்து அனுப்புவர். சிறுமிகளை அந்தந்த நாளுக்குரிய அம்பாள் வடிவத்தில் அலங்கரித்து  வணங்குவர்.

இனிவரும் நாட்களில் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அந்தந்த அம்மனை பத்திய பதிவு வரும்.   அம்பிகையை வழிப்படுவோம். அனைத்து நலன்களும் பெறுவோம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472330

நன்றியுடன்,
ராஜி.

21 comments:

  1. ராஜிக்கா ..
    இப்ப தான் நினைத்தேன் ...என்னடா இன்னும் அக்காவோட நவராத்திரி பதிவை காணோமேனு..

    அருமை...

    இன்னும் படிக்கல....படிச்சுட்டு வரேன்...

    ReplyDelete
    Replies
    1. காய்ச்சல்ப்பா. அதான் லேட்டாகிட்டுது.

      பதிவை படிச்சயா?! அவியல் கேட்டேனே! எங்க?!

      Delete
    2. அய்யோ....காய்ச்சலா ..உடம்மை பார்த்துகோங்க அக்கா...

      இங்கயும் 1௦ நாள் முன்னாடி வீட்ல எல்லாருக்கும் வைரல் காய்ச்சல்..ஒரு வழியா இப்பதான் வீடே இயல்ப்புக்கு வந்து இருக்கு...


      அவியல் தானே கொடுத்துட்டா போச்சு...

      Delete
    3. உடம்பு சரியானப்பின் அவியல் வாங்கிக்குறேன்

      Delete
  2. தகவல்கள் சிறப்பு! எல்லோருக்கும் இன்பம் பொங்கித் தழைத்திட அன்னையின் அருள் கிடைத்திடட்டும்!

    நவராத்திரி வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் நவராத்திரிக்கு கொலு வைக்கும் வழக்கமில்ல சகோ. மத்தபடி வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்க்கும் நவராத்திரி வாழ்த்துகள்

      Delete
  3. மிக சிறப்பான தகவல்கள் அக்கா..
    படங்களும் வழக்கம் போல் வெகு அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அனு

      Delete
  4. தகவல்கள்.அருமையான இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  5. #இந்த மாசத்துல நோய்த்தொற்று அதிகமா இருக்கும்#
    அதான் உங்களுக்கும் ஃபீவர் வர காரணமா :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. எனக்கு நினைவு தெரிஞ்சு இந்தளவுக்கு காய்ச்சல்ல படுக்கல., அத்தனை ஹை ஃபீவர்... ஒரே நாளில் உடம்பை ஆட்டம் காண வச்சிட்டுது

      Delete
    2. விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள் :)

      Delete
    3. உங்க ஓட்டில் இருக்கும் குளறுபடிக்கு இன்றுதான் விடை கிடைத்தது என்று கமெண்ட் போட்டு இருக்கீங்க .....
      என்னாச்சு சகோதரி ராஜி ,இப்படியொரு சஸ்பென்சா ஒரு கமெண்ட்டை போட்டு விட்டு வலைப் பக்கமே வர மாட்டேன்கிறீங்களே!
      கடுமையான ஜூரம் என்று fbல் பார்த்தேன்,குணமான பின் பதில் சொல்லுங்க ,இதற்கிடையில் புதுக்கோட்டை பதிவர் திருவிழாவின் வழங்கப் பட்ட பதிவர்கள் கையேட்டில் உள்ள செல் நம்பர் மூலம் தொடர்பு கொண்டாலும் வேறு யாருக்கோ செல்கிறது ,அதில் கண்ட gmail மூலம் தொடர்பு கொண்டாலும் address not found என்றே வருகிறது !உங்கள் வரவுக்கு காத்திருக்கிறேன் :)

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஆதிரா

      Delete
  7. நவராத்திரி பற்றிய குறிப்புகளும் படங்களும் அருமையா வந்திருக்கு தோழி (உடம்பை பார்த்துக்கோங்க...... காய்ச்சல்னு....... )

    ReplyDelete
    Replies
    1. கடமை முக்கியமில்லையா சகோ

      Delete
  8. //கணவனான சிவனுக்கு ஒரு இரவு.. அண்ணனான பரந்தாமனுக்கும் ஒரே ஒரு இரவு. ஆனா, அனைத்து உயிர்களுக்கும் படியளிக்கும் அன்னையான பராசக்திக்கு ஒன்பது இரவுகள். //

    உலகத்தார் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் . இங்கே உலவும் கதைகளில் பாதி திரிக்கப்பட்டவைகளாக இருக்கிறது .சிவம் என்பது பரப்பிரம்மம் .முத்தொழில் புரியும் மேனேஜர்களான ,ருத்திரன் ,பிரம்மா ,நாராயணன் இவர்களுக்கும் சிவ பரப்பிரமத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவரலால் முத்தொழில் புரிய படைக்கப்பட்டவர்கள் ,இந்த மும்மூர்த்திகள் .அவ்வுளவுதான் .இயேசு சொன்ன பராமபிதாவும் .நபிகள் சொன்ன அல்லாஹ்வும் ,இந்த ஏக கடவுள் ,ஆதிசிவனே,இவரே பரம்பொருள் .,மேலும் அந்த ஆதி சிவனினின் துணையான ஆதி சக்தியை ,இந்த மும்மூர்த்திகள் தரிசிக்கவே ,யகம் யுகமாக தவம் செய்யவேண்டும் .இங்கே ,ருத்திரனை ,சிவமாக வழிபடுகின்றனர் .சித்தர்கள் இந்த உண்மையை புரிந்து கொண்டதினால்தான் .அந்த ஆதிசிவனின் ,திருஸ்தலமான ,அண்ணாமலையை நோக்கி படையெடுக்கின்றனர் .ருத்திரன் வேறு ,சிவபரப்பிரம்மம் வேறு ,அதை இங்கே குழப்பிக்கொள்ளாதீர்கள் .சிவனடியார் என்று ,சொல்லிக்கொள்பவர்களுக்கு கூட ,சிவன் யாரென்னு ,தெரியவில்லை ,மம் மூர்த்திகளில் ,இருக்கும் ,ருத்திரனை ,சிவமாக வழிபடுகின்றனர் .ஆனால் ,சிலருக்கு தெரிந்து இருக்கிறது .அப்பர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் ,திருஞான சம்பந்தன் பாடியது இந்த ஆதி சிவனையே ...ருத்திரனை அல்ல ...

    ReplyDelete
    Replies
    1. புதுசு புதுசா நோய் வர்ற மாதிரி புதுசு புதுசா கடவுளும், கோவில்களும் , வழிபாட்டு முறைகளும் வந்திட்டிருக்கு. அன்பு, பாசம் போல கடவுளும் வியாபாரமாகிட்டுதுங்க அமிர்தா. என் பாட்டி பொறந்து வளர்ந்து வாக்கப்பட்டு செத்துபோனது வரை 83 வருசம் இதே திருவண்ணாமலை மாவட்டத்துலதான் இருந்தாங்க. அவங்களுக்கு கார்த்திகை தீபம் தெரியுமே தவிர கிரிவலம் சுத்தினது கிடையாது. இத்தனைக்கும் அவங்க காசி, சபரிமலைன்னு எல்லா இடமும் சுத்தினவங்க. மீடியா உதவி இருந்தா போதும் எல்லா கோவிலும், எல்லா சாமியும் பிரபலம்தான்.


      அந்த ஆதிசிவனான ருத்திரன்கிட்டயே கேட்டாலும் எல்லாம் கர்ம வினைப்படிதான்ன்னு ஒரு டயலாக் விடுவார். அப்படி பாத்தா அந்த ருத்திரனுக்கும் மேலான ஒரு சக்தி இருக்கு. எந்த சாமியாலயும் எதும் ஆகாது. அதான் உண்மை. நம்ப மனத்திருப்திக்குதான் சாமி கும்பிடுறதுலாம்.

      Delete
    2. ராஜி உடம்பு தேவலாமா...

      எனக்கும் ஒரு வாரம் முன்பு காய்ச்சல் தலைபாரம் என்று இன்னும் தொண்டையும் இருமலும் சரியானபாடில்லை...உடம்பைப் பார்த்துக்கங்க...

      கீதா

      Delete