Thursday, May 03, 2018

முதன்முதலாக,,,,, பாகம் 2


முதன் முதலில் மாவட்ட ஆட்சித் தலைவர்களை(கலெக்டர்) நியமித்தவர் ஆங்கில கவர்னர் வாரன் ஹோஸ்டிங்ஸ் ...,
சென்னை நகரின் வரலாற்றை முதன் முதலில் வெளியிட்டவர் எ.எஸ்.சீனிவாச சாஸ்திரி ....,
ஜெய் ஜவான்,ஜெய் கிஷான் என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி ....,
தஞ்சாவூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி(1784)தான் இந்தியாவில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்த முதல் பள்ளி by Frederick C.Schwartz ....

ஆஸ்டெக் இனத்தவர்கள்தான் முதன்முதலில் தக்காளியை பயிர் செய்தனர்.
மருத்துவத்தை பத்தி முதன்முதலாய் வெளிவந்த புத்தகம் ’சுசுருத சம்ஹிதை’.
கிரேக்கர்கள்தான் முதன்முதலா காந்தத்தை பத்தி அறிந்தவர்கள்...
இந்தியாவில் முதல் பாதாள ரயில் ஓடியது கொல்கொத்தாவில்தான்...
ரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர் டாக்டர் வில்லியம்ஸ் ஹார்வி.


1989ல் வெளியான இளையராஜா இசையில் உருவான மணிரத்னத்தின் "அஞ்சலி " படப்பாடல்கள்தான் முதன் முதலா    Compact disc எனப்படும் சி.டி. வழியாக  வெளியானது. இந்தியாவில், தமிழகத்தில் சிடியில் வெளியான முதல் படப்பாடல் இதுதான்.  இப்படம் இசைஞானியின் 500வது படம்.. பாடல்களை சி.டியில் வெளியிட்ட பெருமைக்கு உரியவர்.. மணிரத்ணத்தின் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான மறைந்த ஜி.வெங்கடேசன் அவர்கள்.. இதைத்தொடர்ந்து தளபதியும் சிடியில் வெளியானது. 
மைசூரை சேர்ந்த திம்மையா என்பவரால், 1939ம் ஆண்டு வேலூரின் முதல் திரையரங்கை கட்டினார். இதன் பெயர் ‘அபேரா’. இப்ப இது அண்ணா கலையரங்கம்ன்ற பேரில் இயங்குது. அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணமே வசூலிப்பாங்க.  நகரின் மையத்தில் இருந்தாலும் பழமையின் காரணமா இந்த அரங்கத்தில் கூட்டம் வருவதில்லை. அதனால, இப்ப படம் திரையிடுவது நிறுத்தப்பட்டு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடைப்பெறுது. 





1966ம் ஆண்டில் தமிழகத்தின் முதள் நகராட்சியாக வாலாஜாப்பேட்டை அறிவிக்கப்பட்டது. அதேப்போல,  சென்னை ராயப்புரம் - வாலாஜாப்பேட்டைக்கு இடையில்தான் தமிழகத்தின் முதல் ரயில்பாதை அமைப்பட்டது. வேலூர் மாவட்டத்தில், ஆற்காடுக்கு அடுத்து வாலாஜாப்பேட்டை இருக்கு. வாலாஜான்னு சுருக்கமா அழைக்கப்படும் வாலாஜாப்பேட்டையின் ரயில் நிறுத்தத்துக்கு மட்டும் வாலாஜா ரோடுன்னு பேரு. 

முதன்முதலாக....... தொடரும்...
நன்றியுடன்,
ராஜி 

10 comments:

  1. விடயங்களை முதன் முதலாக அறிகிறேன் சகோ

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?! நன்றிண்ணே

      Delete
  2. பாகம் இரண்டு நன்று......பழமையைப் புதிதாக வரும் சந்ததியினருக்கு கடத்துதல் கட்டாயம்.....படங்களும் அருமை...... நன்றி,தங்கச்சி........

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. அருமையான தகவல்கள் பதிவுக்கு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. நிறைய தகவல்கள். அருமை சகோ/ராஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதாக்கா துளசியண்ணா.

      Delete